இந்திய ஊழியர் மரணம்: மற்றொரு ஊழியர் சிகிச்சையில்… இந்தியர் குடும்பத்துக்கு உதவ தகவல் கோரல்

Indian death tuas-gas-fire
Google maps street view

சிங்கப்பூரில் இந்திய ஊழியர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

கடந்த டிச. 30 அன்று 21 துவாஸ் அவென்யூ 3ல் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதான அவர் இறந்ததாக MOM கூறியுள்ளது.

வாயுக்கள், எரிவாயு குழாய்கள் மற்றும் சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கையாளும் Asia Technical Gas Co. (Pte) Ltd என்ற நிறுவனம் தான் அந்த முகவரியில் அமைந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூரில் GST இனி 8 சதவீதம் – ஜன.1 முதல் அமல்: S$400 இருந்தால் வரி

முதற்கட்ட விசாரணையின்படி, வளாகத்தில் உள்ள சிலிண்டர்களில் இருந்து எரியக்கூடிய அசிட்டிலீன் வாயு வெளியானது காரணமாக இருக்கலாம் என்று MOM, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீ விபத்து அன்று காலை 9:25 மணிக்கு ஏற்பட்டதாகவும், அது 9:50 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு ஊழியரான 43 வயதான சீன நாட்டவரும் இந்த தீ விபத்தில் சிக்கி காயமடைந்தார், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அவர் சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியப் நாட்டவரின் மரணத்துடன் சேர்த்து 2022ல் மட்டும் சிங்கப்பூரின் 46 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியிலும் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

இறந்தவர் யார், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற தகவல் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தெரிந்தவர்கள் inbox இல் தகவல் அனுப்பலாம்.

ஷெங் சியோங் அனைத்து கடைகளிலும் தள்ளுபடி விற்பனை – மார்ச் 31 வரை சலுகை