இந்தியப் பணிப்பெண்ணுக்கு கடும் நோய்.. எகிறும் மருத்துவ செலவு – உதவி கோரும் சிங்கப்பூர் முதலாளி

indian domestic helper-brain-bleed-stroke singapore
Photo from gogetfunding website

இந்தியப் பணிப்பெண் மூளைக்காய்ச்சல் மற்றும் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஜனவரி 14ஆம் தேதி அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சகோதரியை நாசம் செய்த அண்ணன்.. ஒன்றாக படுக்க அனுமதித்த தாய் – 7 ஆண்டுகள் நடந்த கொடூரம்

கடந்த ஜனவரி 10 ஆம் தேதியோடு பணிப்பெண்ணுக்கு 26 வயதாகிறது.

அவருக்கு எதிர்பாராமல் திடீரென இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பாஸ்டியோ என்று அழைக்கப்படும் அவரது முதலாளி கூறினார்.

Jomhao Veinthutheng என்ற அந்த பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

பின்னர், அவர் மருத்துவரை சந்தித்தார். அவரின் ஆலோசனையின் பேரில் பெண்ணுக்கு CT ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது மூளை பாதிக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து, அவருக்கு மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நோயின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பணிப்பெண், “அழுது கொண்டு, நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்” என்று கூறியதாக முதலாளி கூறினார்.

ஆனால் இந்தியா திரும்புவதற்கு முன், கடந்த ஜன. 13 அன்று அவருக்கு வாந்தி மற்றும் இடது பக்கம் செயலிழப்பு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வீட்டு பணிப்பெண்களின் காப்பீட்டுத் தேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன் Jomhao பணியமர்த்தப்பட்டார். (தற்போது ஜூலை 1, 2023 முதல், குறைந்தபட்ச கவரேஜ் S$60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.)

எனவே, வேலைவாய்ப்புப் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏஜென்சியால் வாங்கப்பட்ட அவருக்கான காப்பீடு வெறும் S$15,000 வரையிலான (மருத்துவமனையில் சேர்க்கும் மற்றும் அறுவை சிகிச்சைகான) செலவுகளை மட்டுமே உள்ளடக்கும்.

அவருக்கு ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னரே, (ஜனவரி 11 ஆம் தேதி வரை) அவருடைய மருத்துவ கட்டணம் அந்த காப்பீடு தொகையைத் தாண்டியது.

இதனை அடுத்து அவருக்காக நிதி திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலாளி கூறினார்.

“பணிப்பெண் எனக்கு ஒரு குழந்தை போன்றவர், நான் அவரை என் சொந்த குழந்தை, என் சொந்த சகோதரி போல நடத்துகிறேன்” ஆகையால் அவரை அப்படையே விட தனக்கு மனமில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்திய பெண்ணுக்காக நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளவர்கள் இதை கிளிக் செய்து உதவி செய்யலாம் என அவர் கூறினார்.

நன்கொடை அளிக்க: https://gogetfunding.com/treatment-for-jomhao-veinthutheng/

இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை