இந்தியரை இன ரீதியாக கொச்சைப்படுத்தி, எட்டி உதைத்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

இந்திய பெண்மணி ஒருவரை இனரீதியாக அவமதித்து, மார்பில் எட்டி உதைத்த ஆடவர் ஒருவருக்கு இன்று (ஆக. 7) மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபோன்ற மோசமான செயல்கள் சிங்கப்பூர் சமூகத்தில் இன மற்றும் சமய ஒற்றுமையை பாதிக்கும் என நீதிபதி கூறினார்.

Toto National Day Draw: வெறும் S$1 க்கு டிக்கெட் வாங்கி S$2.4 மில்லியன் பரிசைத் தட்டிச்சென்ற அதிஷ்டசாலி

இந்த சம்பவம் சோவா சூ காங்கில் உள்ள நார்த்வேல் காண்டோமினியம் அருகே 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொற்றுநோய் நிலவியபோது 32 வயதான வோங் சிங் ஃபோங் என்று அந்த ஆடவர், ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாயைத் தாக்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

என்ன நடந்தது?

நிதா நடைபாதையில் வேகமாக நடந்து சென்றபோது, ​​வோங் அவரை தடுத்துள்ளார். அந்த நேரத்தில், நிதா நடை பயிற்சி செய்ததால் வியர்வையை வழிந்துள்ளது, அதனால் நிதா முகக்கவசத்தை கீழே இறக்கியபடி இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் நடப்பில் இருந்த சிங்கப்பூரின் COVID-19 விதிமுறைகளின்படி, உடற்பயிற்சி செய்பவர்களை தவிர அனைவரும் முகக்கசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

அப்போது, நிதாவை நோக்கி முகக்கவசத்தை மேலே இழுக்குமாறு வோங் சத்தம்போட்டுள்ளார். நிதா உடற்பயிற்சி செய்வதாக விளக்கி கூறிய பிறகும் அவர் இன ரீதியாக கொச்சை வார்த்தைகளை பேச ஆரம்பித்துள்ளார்.

“எனக்கு சண்டை போட பிடிக்காது சார், அதனால் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறி நிதா விலகிச் செல்ல முயன்றார், ஆனால் வோங் நிதாவை நோக்கி ஓடிவந்து மார்பில் உதைத்துள்ளார்.

இதனால் தடுமாறிய நிதா கீழே விழுந்தார், இதனால் அவரின் இடது கையில் சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பைக், லாரி மோதி விபத்து: 23 வயது ஊழியர் மரணம்

இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்

இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு