சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Photo: Minister Jaishankar

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் அரசமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகைத் தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இன்று (அக்.20) சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங்-கை நேரில் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
Photo: Minister Jaishankar

சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியிடம் 909 கிராம் தங்கம் பறிமுதல்!

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங்கை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரம்!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார்.