சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியிடம் 909 கிராம் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியிடம் 909 கிராம் தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அந்த வகையில், அக்டோபர் 19- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பெண் பயணி ஒருவர் அணிந்திருந்த ஷார்ட்ஸுக்குள் தைக்கப்பட்டிருந்த ரகசிய பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்க பேஸ்ட் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ ஊஞ்சல் அலங்காரம்!

அவர் கடத்தி வந்த சுமார் 24 கேரட் 909.500 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அவற்றின் மதிப்பு சுமார் 55.07 லட்சம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக, விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.