சிங்கப்பூரில் கட்டுமானப் பணியிலிருந்த போது பாரந்தூக்கி அடியில் சிக்கி மரணித்த இந்தியர் – பணம் சம்பாதிக்கப் போன இடத்தில பரிதாபமாக உயிர் பிரிந்த சோகம்

(Photo: Today)

சிங்கப்பூரில் இந்தாண்டின் 27-ஆவது பணியிட மரணம் பதிவாகியுள்ளது.க்ரேன் எனப்படும் பாரந்தூக்கி அடியில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.பணியிட மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பணியிடங்களில் ,பாதுகாப்பை வலுப்படுத்த மனிதவள அமைச்சகம் நடிவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங்,பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு,சுகாதார அதிகாரிகள் நியமிக்கபடுவார்கள் என்று தெரிவித்தார்.மேலும் தரமற்ற பணி அணுகுமுறையை மேற்கொள்ளும் ஒப்பந்த்ததாரர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது குறித்தும் ஆய்வுகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பணியிட மரணங்களைத் தவிர்க்க கட்டுமானத் துறை தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் தங்கள் அன்புக்கு உரியவர்களிடம் பாதுகாப்பாக இருப்பிடத்திற்கு திரும்புவதை உறுதி செய்யவேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் காலை 10:15 மணியளவில் மண்டாய் குவாரி சாலையில் உள்ள கட்டுமானத் தளத்தில் 32 வயதான இந்தியாவைச் சேர்ந்த நபர் பாரந்தூக்கி அடியில் சிக்கி மரணித்தார்.மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது