சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் சாதனை: 100 பில்லியன் டாலர் ஹிட்!

some helplines for migrant worker who that needs assistance
(Photo: Dailytimes)

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பும் பணம் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின்படி, வருடாந்திர சாதனையான 100 பில்லியன் டாலர்களை அது எட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை

அதாவது மெக்ஸிகோ (USD60 பில்லியன்), சீனா (USD51 பில்லியன்), பிலிப்பைன்ஸ் (USD38 பில்லியன்), எகிப்து (USD32 பில்லியன்) மற்றும் பாக்கிஸ்தான் (USD29 பில்லியன்) ஆகிய நாடுகளை விட அது மிக அதிகம்.

கடந்த 2021ஆம் ஆண்டில் பணம் அனுப்பும் விகிதம் அதற்கு முந்தைய ஆண்டை விட 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வெளிநாட்டுப் பணம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதம் ஆகும்.

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டிகளை இலவசமாக காணுங்கள்: 300 அங்குல திரை… 500 பேர் வரை என்ஜாய் பண்ணலாம்