இந்திய, தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் மறைந்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கருக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

Photo: Minister Indranee Rajah Official Facebook Page

வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் எனப்படும் ‘Lisha’, ‘இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில், நேற்று (08/04/2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் நிதி மற்றும் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சருமான இந்திராணி ராஜா கலந்துக் கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்!

நிகழ்ச்சியில் மறைந்த பிரபல நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கரை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அமைச்சர் இந்திராணி ராஜா வழங்க, சாந்தா பாஸ்கரின் மகள் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து அமைச்சர் இந்திராணி ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “Lisha- வால் லிட்டில் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களில் இந்திய சமூகத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. தேசிய கலாச்சார அடையாளமும் கலை சமூகத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினருமான சாந்தா பாஸ்கரை சமூகம் நினைவு கூர்ந்ததால், ஒரு சிறப்பு மற்றும் கடுமையான பிரிவு இருந்தது.

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

தொடக்கப் பள்ளியில் எனது வகுப்புத் தோழியாக இருந்த அவரது மகள் மீனாவுக்கு, திருமதி சாந்தாவைக் கௌரவிக்கும் வகையில் சிறந்த பெண்கள் விருதை (Women of Excellence Award) வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். திருமதி சாந்தா நடனம் மற்றும் கலையின் அற்புதமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கலைத் திறமைகளின் வழியால் பலர் உத்வேகம் பெற்றிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.