வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை

Pic: File/Try Sutrisno Foo

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணை கடுமையாக தாக்கியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு சிங்கப்பூரில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், சூரிய கிருஷ்ணன் என்ற அந்த இளைஞர் பாதிக்கப்பட்ட 27 வயதான அந்த பணிபெண்ணுக்கு S$8,500 இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

பொடுபோக்கான மருத்துவத்தால் உயிரிழந்த தமிழக ஊழியர்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம்!!!

கிருஷ்ணன் கடந்த செவ்வாயன்று தனது வீட்டுப் பணிப்பெண்ணை தானாக முன்வந்து காயப்படுத்தியதாக ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கூடுதலாக, பணிப்பெண்ணின் தலை, தோள்பட்டை மற்றும் தொடையில் உதைத்த இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட மியான்மர் பணிப்பெண், சூரியாவின் சகோதரியின் வீட்டில் பணிபுரிந்தவர் என கூறப்பட்டுள்ளது.

சூர்யா, ஹௌகாங் ஹவுசிங் எஸ்டேட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது சகோதரி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!