இந்திய வம்சாவளி ஆடவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான உலகளாவிய அழைப்புகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம் அதனை மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்த நிலையில், தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 33 வயதான மலேசிய தமிழர் நாகேந்திரன் கே தர்மலிங்கத்துக்கு சாங்கி சிறையில் நாளை நவம்பர் 10ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

ஏவியேஷன் பார்க் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2022இல் தொடங்கும்

இந்நிலையில், தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என BBC கூறியுள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மேலும், கருணை காட்ட வேண்டி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக நாகேந்திரனின் வழக்கறிஞர் எம்.ரவி முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், அதனால் தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் தூக்கு நாளைய தினம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு அவரின் குடும்பத்துக்கு சிறிய நிம்மதியை தந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய அப்டேட்