காதலியை தாக்கிய இந்திய வம்சாவளி ஆடவர் – சிறை விதித்து கோர்ட் தீர்ப்பு

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூர்: காதலியை உலோக பறவை கூண்டால் தாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான விக்னேஷ்வரன் ஜெகதீசன் என்ற அந்த ஆடவர், லட்சுமி கார்த்திகா சுப்பிரமணியம் (39) என்பவருடன் காதல் உறவில் இருந்தார்.

அவர்களிடையே சில காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. நாய் வளர்ப்பதில் தொடங்கிய வாக்குவாதம், 1 கிலோ எடையுள்ள உலோக கூண்டை தூக்கி எறியும் அளவிற்கு வளர்ந்தது.

கொள்கலன் விழுந்து மரணித்த ஊழியர் – விபத்துக்கு வெளிநாட்டு ஊழியர் தான் காரணம்.. குற்றம் சாட்டும் அதிகாரி

அதாவது விக்னேஷ்வரன் கூண்டை லட்சுமி மீது வீசி தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த லட்சுமி, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

அவரைக் குற்றவாளியாகக் கண்டறிந்த நீதிமன்றம், விஷ்ணேஸ்வரனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது.

மற்றவர்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் செயல்பட்டதற்காகவும், போலீஸ் அதிகாரி முன்பே லட்சுமிக்கு மிரட்டல் விடுத்ததற்காகவும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் லட்சுமிக்கு காயம் ஏற்படவில்லை, ஆனாலும் வன்முறை செயலுக்காக அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஞ்சி விடுதிக்கு வரும் வசதி.. அனைத்தும் ஒரே இடத்தில்