“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் கட்டுமான ஊழியர் ஒருவர் சக ஊழியரின் விரலை கடித்து துப்பியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில், இந்திய ஊழியரான லோகன் கோவிந்தராஜ் (வயது 31) என்பவர், 42 வயதான முத்து செல்வத்தின் விரலின் ஒரு பகுதியை கடித்து துப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியுமா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே!

பின்னர் குற்றம் நடந்த இடத்தில் விரல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதை ஊழியரின் கையில் மீண்டும் இணைக்க முடியவில்லை.

இந்நிலையில், அவரைத் தாக்கிய லோகன் கோவிந்தராஜ்க்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை நேற்று (பிப். 25) விதிக்கப்பட்டது.

அவர் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இருவருமே இந்திய நாட்டை சேர்ந்த தமிழக ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது ?

சக கட்டுமான ஊழியரின் விரல் பகுதியை கடித்து துப்பிய வெளிநாட்டு ஊழியர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பாஸ்போர்ட் இல்லாத காட்டுப்பன்றி… சிங்கப்பூர் to ஜோகூர் வரை நீந்தி பயணம் – “VTL சேவைக்கே சவால்” என பலர் நகைச்சுவை