விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததால் பரபரப்பு!

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததால் பரபரப்பு!
Twitter Image

 

கடந்த டிசம்பர் 29- ஆம் தேதி அன்று காலை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) நிறுவனத்தின் ‘6E 6107’ என்ற எண் கொண்ட விமானம் பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது, இந்த விமானத்தில் பயணம் செய்த குஷ்பூ குப்தா என்பவர், தான் பயண டிக்கெட் முன்பதிவின் போது, வெஜ் சாண்ட்விச்சையும் ஆர்டர் செய்துள்ளார்.

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 4 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் கைது

இதையடுத்து, அவருக்கு விமான ஊழியர்கள் வெஜ் சாண்ட்விச்சை (Sandwich) வழங்கினர். அதில் உயிருடன் கூடிய புழு இருப்பதை அறிந்த குஷ்பூ குப்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர், விமான பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், இது குறித்து அந்த பயணி தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார்.

லாரி மற்றும் வேன் மோதி விபத்து: 21 வயதான ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணம்

இது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சம்மந்தப்பட்ட பெண் பயணியிடம் மன்னிப்புக் கேட்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எங்கள் குழுவினர், விமானத்தில் சாண்ட்விச் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.