இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உயிருள்ள கோழிகள் இறக்குமதி!

Photo: Ministry of Sustainability and the Environment and Singapore Food Agency

 

சிங்கப்பூரில் பிராய்லர் கோழி இறைச்சியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த தேவையில் 34% கோழி இறைச்சியை மலேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்து வந்தது சிங்கப்பூர். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு கோழி இறைச்சியின் விலையைக் குறைக்கும் வகையிலும், அதன் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோழி இறைச்சி ஏற்றுமதியைத் தடைச் செய்தது மலேசியா அரசு.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

இதையடுத்து, மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ‘பிராய்லர் கோழி’ இறைச்சியின் அளவை அதிகரித்தது. இந்த நிலையில், குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், தற்போது இந்தோனேசியாவும் இணைந்துள்ளது.

Photo: Minister Koh Poh Koon Official Facebook Page

அதன் தொடர்ச்சியாக, இந்தோனேசியாவில் உள்ள ஒரு கோழி பண்ணையில் இருந்து பிந்தானில் சரக்கு கப்பல் மூலம் 25,000 உயிருள்ள பிராய்லர் கோழிகள் கொண்ட கண்டெய்னர், கடந்த சனிக்கிழமை அன்று காலை ஜூரோங் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதனை நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புறத்துறையின் மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Senior Minister of State, Koh Poh Koon) நேரில் பார்வையிட்டார். அந்த பண்ணை பறவைக் காய்ச்சல் அற்றது என உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் வந்தது செம்ம அப்டேட் – இனி தனி தனியாக லாக் செய்யலாம்: இப்போதே அப்டேட் செய்யுங்க

குறிப்பாக, இந்தோனேசியாவில் இருந்து உயிருள்ள கோழிகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு மலேசியாவில் இருந்து மட்டுமே உயிருள்ள கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது என்பது நினைவுக்கூறத்தக்கது.