இந்தோனேசிய அதிபர் தேர்தலையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்!

இந்தோனேசிய அதிபர் தேர்தலையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்!
Photo: Mothership reader

 

இந்தோனேசியா நாட்டின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு வாழ் இந்தோனேசியர்களும் வாக்களிக்கும் வகையில், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைத்து, இந்தோனேசியர்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

பிரம்மாண்ட ‘டிரோன் ஷோ’-வைக் கண்டு வியந்த சிங்கப்பூரர்கள்!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரின் சாட்ஸ்ஒர்த் சாலையில் (Chatsworth Road) உள்ள சிங்கப்பூருக்கான இந்தோனேசிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் பிப்ரவரி 11- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 06.00 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தோனேசிய நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதேபோல், சிங்கப்பூருக்கான இந்தோனேசியத் தூதரும் தனது மனைவியுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

“சக ஊழியர்கள் கஷ்டப்பட கூடாது” – இல்லாதவர்களும் சாப்பிட வேண்டும், என நன்கொடை அளித்த வெளிநாட்டு ஊழியர்

பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு, தூதரக அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் எப்போது வாக்குகள் எண்ணப்படுகிறதோ, அன்றே சிங்கப்பூரில் இந்தோனேசியத் தூதரகத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.