இழுவைப் படகில் வரிச் செலுத்தப்படாத சிகரெட்டுகள்…சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

Photo: Immigration & Checkpoints Authority Official Facebook Page

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பான கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் வகையில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் (Singapore Immigration & Checkpoints Authority)

70 வருடங்களைக் கடந்த சிங்கப்பூர் தமிழர் சங்கம் குறித்த அறியப்படாத தகவல்கள்!

சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 25- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தோனேசியா நாட்டின் பதிவெண் கொண்ட ‘மாஜூ டயா 87’ (Maju Daya 87) என்ற இழுவைப் படகை (Indonesian- Registered Tugboat), வழிமறித்து குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள், அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சிங்கப்பூர் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவு!

இழுவைப் படகு முழுவதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில், படகில் இருந்த பச்சை நிற பெட்டிற்கு அருகில் உள்ள தொட்டி போன்ற ஆழமான குழியில், வரி செலுத்தப்படாத (Unpaid Cigarettes), சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த சுமார் 1,534 பெட்டி சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர், அவற்றை முழுவதும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கூடுதல் விசாரணைக்காக, இந்த விவகாரம் சிங்கப்பூர் சுங்கத்துறை (Singapore Customs) அதிகாரிகளிடம் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.