கீழே விழுந்து காயமடைந்த கப்பல் ஊழியர் மருத்துவமனையில் அனுமதி

(Photo: SCDF)

கப்பல் குழு உறுப்பினர் ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்ததாவும், அதில் அவர் அசைவில்லாமல் இருந்ததாகவும் SCDF ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதில் SCDF வல்லுநர்கள் நிலைமையை மதிப்பிடுவதற்காக மீட்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கப்பலில் சென்றதாகவும் SCDF தெரிவித்துள்ளது.

விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவருக்கு 16 மாத சிறை

அந்த நிபுணர்களில் ஒருவர் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநராக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே விழுந்த அந்த குழு உறுப்பினர் சுயநினைவுடன் காணப்பட்டார். மேலும், அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர், காயமடைந்த குழு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த இரண்டு வாரங்களில் SCDFஆல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கடல் மீட்பு பணி இதுவாகும்.

எதிர்பாராத விதமாக தொழிற்துறை இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை – போராடி மீட்ட SCDF