‘இன்சாட்-3DS’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

'இன்சாட்-3DS' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
Photo: ISRO

 

‘இன்சாட்-3DS’ செயற்கைக்கோள் GSLV-F14 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பட்ஜெட்: ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்குமா?

இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் GSLV- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ வடிவமைத்துள்ள ‘இன்சாட்-3DS’ செயற்கைக்கோள் சுமார் 2,275 கிலோ எடைக்கொண்டது. வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தான் ‘இன்சாட்-3DS’. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வானிலைக்கான தகவல்களைத் துல்லியமாக அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உயிரிழந்த ஆடவர்.. உறவினர்களை தேடும் போலீசார்

அதேபோல், காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களைத் துல்லியமாக அறிய முடியும். வெவ்வேறு உயரங்களில் உள்ள ஓசோன் அளவை கண்டறிய முடியும். இதனிடையே, செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” இன்சாட்- 3DS’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது; திட்டமிட்டபடி இலக்கை ராக்கெட் எட்டியது; செயற்கைக்கோளின் செயல்பாடு திருப்தியாக உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை வடிவமைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.