COVID-19: ஊழியர்களின் மன நலனை ஆதரிப்பதற்கான ஆலோசனை…!

Inter-agency advisory on supporting mental well-being of workers under COVID-19 work arrangements
Inter-agency advisory on supporting mental well-being of workers under COVID-19 work arrangements (Photo: Straits Times)

COVID-19 சூழலில் ஊழியர்களின் மன நலனை ஆதரிப்பதற்கான ஆலோசனைகளை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஊழியர்களின் பதற்றம்:

  • வேலை தொடர்பான பாதுகாப்பற்ற நிலைமை
  • சமூக அளவில் தனிமைப்படுத்தப்படுதல்
  • வீட்டிலிருந்து வேலை செய்வதையும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதையும் சமாளித்தல்.

இதையும் படிங்க : KTP மருத்துவமனையில் இறந்த இந்திய ஊழியர் 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்; ஒருவரின் வருமானத்தில் இயங்கிவந்த குடும்பம்..!

முதலாளிகள் செய்யவேண்டியவை:

  • சம்பளம், விடுப்பு தொடர்பான அண்மைத் தகவல்களை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
  • ஊழியர்களின் நலன் குறித்து அடிக்கடி விசாரிக்கவேண்டும்.
  • பிள்ளைகளைக் கவனிக்க, பெற்றோருக்கு நீக்குப்போக்கை வழங்கவேண்டும்.
  • ஆலோசனை சேவைகளை அணுக வகைசெய்யவேண்டும்.

அனைவரும் செய்யவேண்டியவை:

அன்புக்குரியவர்களோடு தகவல் பகிர்வு செயலிகள் போன்றவற்றின் மூலம் தொடர்பில் இருக்கவும்

துடிப்பாக இருக்கவும்; சமசீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும்; போதுமான தூக்கத்தைப் பெறவும்.

கூடுதல் விவரங்கள்: go.gov.sg/staff-support

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!