‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2023’ விழாவில் கலந்துக் கொள்ளும் மக்களிசை கலைஞர்கள் ராஜலக்ஷ்மி, செந்தில் கணேஷ்!

'சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2023' விழாவில் கலந்துக் கொள்ளும் மக்களிசை கலைஞர்கள் ராஜலக்ஷ்மி, செந்தில் கணேஷ்!
Photo: MWC

 

சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாகவும், அவர்களுடைய உன்னத உழைப்பைப் பாராட்டும் விதமாகவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் மற்றும் ACE மற்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் இணைந்து, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின விழாவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

“61 வயது பெண்ணை 10 நாட்களுக்கும் மேலாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

வரும் டிசம்பர் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 01.30 மணிக்கு லிட்டில் இந்தியாவில் (Little India) பிரிட்ச் சாலையில் (Birch Road) உள்ள திறந்தவெளி திடலில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின விழா (International Migrants Day- 2023) பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மக்களிசை கலைஞர்கள் ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, கிராம பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்களைப் பாடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மகிழ்விக்க உள்ளனர்.

ART கருவிகளை வாங்கி குவிக்கும் பொதுமக்கள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

இந்த விழாவில் பங்கேற்க நுழைவு கட்டணம் இல்லை; அனுமதி இலவசம். எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையத்தின் (Migrant Workers’ Centre- ‘MWC’) என்ற ஃபேஸ்புக் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.