வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது சிங்போஸ்ட்!

அஞ்சல் கட்டணத்தை உயர்த்தப்படவிருப்பதாக 'சிங்போஸ்ட்' அறிவிப்பு!
Image via Google Maps

 

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களுக்கான கட்டணத்தை உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

இது குறித்து டிசம்பர் 07- ஆம் தேதி சிங்கப்பூரின் அஞ்சல் துறையான சிங்போஸ்ட் (SingPost) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊழியர்களின் சம்பளம், மின்சார கட்டணம், எரிபொருளின் விலை, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 5 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் கட்டண உயர்வு அடுத்தாண்டு (2024) ஜனவரி 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

‘ஏரோகிராம்’ (aerogrammes) என்றழைக்கப்படும் விமானம் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள், அச்சிட்ட தாள்கள், அஞ்சல் அட்டைகள் போன்றவை 20 கிராம் எடையுள்ளவையாக இருந்தால் தற்போது 80 காசு வசூலிக்கப்படும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் 85 காசுகளாக வசூலிக்கப்படும். எனினும், சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கும், புருணைக்கும் அனுப்பப்படும் ‘ஏரோகிராம்’களுக்கு அஞ்சல் கட்டணத்தில் மாற்றம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்

புதிய அஞ்சல் கட்டண உயர்வுக் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, டிசம்பர் 07- ஆம் தேதி சிங்போஸ்ட் பங்குகளின் விலை அதிகரித்துக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.