சிங்கப்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் சிக்கினர்

illegal-gambling
SPF

சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 15 பேர் மீது விசாரணை நடைபெறுகிறது.

அந்த சந்தேக நபர்கள் 38 முதல் 86 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

சீனப் புத்தாண்டு, காதலர் தினத்தில் “நாங்கள் வாடகைக்கு” கிடைப்போம் – களம் இறங்கும் சிங்கப்பூர் டிக்டாக்கர்ஸ்!

கடந்த ஜனவரி 8 மற்றும் 19 ஆம் தேதிகளுக்கு இடையில், உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதாவது, மார்சிலிங் கிரசண்ட், யுஷுன் ஸ்ட்ரீட் 72 மற்றும் யுஷுன் அவென்யூ 5 ஆகிய இடங்களில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த சோதனை நடவடிக்கைகளை நடந்தது.

இதில் 68 மற்றும் 79 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள், 51 மற்றும் 86 வயதுடைய 11 பேருக்கு புக்மேக்கர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சூதாட்டச் சட்டத்தின் கீழ் 38 வயதான பெண் ஒருவர் இதில் விசாரணையில் உள்ளார்.

இதில், S$500க்கும் அதிகமான பணம், இரண்டு கையடக்கத் கைபேசிகள் மற்றும் சூதாட்டம் தொடர்பான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?