சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வரியைக் குறைத்து செலுத்தி வந்த நிறுவனத்திற்கு அபராதம்..!

Investment company and director fined for declaring incorrect directors' fees in tax returns
Investment company and director fined for declaring incorrect directors' fees in tax returns

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் வருமான வரியில் தவறான செலவுகளை அறிவித்ததற்காக முதலீட்டு நிறுவனம் ஒன்றிக்கு S$955,580 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு இயக்குநருக்கு S$25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

Hwa Luck முதலீடுகளின் வரி வருமானத்தில் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தவறான தகவல்களை வழங்கியதாக Tan Hwa Luck மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1995 மற்றும் 2007க்கு இடையில் மொத்த வரி S$763,285 குறைத்து காட்டப்பட்டதாக சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) தெரிவித்துள்ளது.

IRAS தணிக்கையின்போது, ​​2006 மற்றும் 2009 நிதியாண்டில் இயக்குநர்களின் கட்டணம் இரண்டு தவணைகளில் மொத்தமாக செலுத்தப்பட்டதாக டான் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், அந்தத் தொகை அவரது சொந்த வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. அதனை அடுத்து, தாம் பொய்யாக கணக்கு காட்டியதை அவர் ஒப்புக்கொண்டார்.

செலுத்தாமல் அவர் ஏமாற்றிய அந்த வருமான வரியைப் போலவே இரண்டு மடங்கு வரித்தொகையை செலுத்துமாறு டாக்டர் டானுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg