“ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இருமுடி திருவிழா!”

"ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இருமுடி திருவிழா!"
Photo: HEB

 

“வரும் ஜனவரி 07- ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) ஐயப்பன் சுவாமிக்கு இருமுடி திருவிழா (Irumudi Festival) நடைபெறும்” என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

சிட்டி பிளாசாவின் எஸ்கலேட்டர் படியில் சிக்கிய கை – விரைந்த SCDF

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், – “சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சுவாமிக்கு வரும் ஜனவரி 07- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இருமுடி திருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 07.30 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு சங்கல்பமும், காலை 07.45 மணிக்கு கலச பூஜையும், காலை 08.00 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி காயத்ரி மூலமந்தரமும், ஹோமமும், காலை 08.30 மணிக்கு பூர்ணாஹுதியும், தீபாராதனையும், காலை 08.45 மணிக்கு இருமுடிக் கட்டுதலும், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இருமுடி நெய் அபிஷேகமும், காலை 11.45 மணிக்கு சிறப்பு பூஜையும், மஹா தீபாராதனையும், மதியம் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.

சண்டையிட்டு கொண்ட இரு Crested வகை பல்லிகள்.. 2 நிமிடத்திற்குள் நிறம் மாறும் அதிசயம் – சிங்கப்பூர் கலைஞரின் அசல் “கிளிக்”

ஜனவரி 07- ஆம் தேதி இருமுடி வழங்க பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இருமுடி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, ஐயப்பன் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.