சிங்கப்பூரில் S$1.17 மில்லியன் ஜாக்பாட் பரிசைத் தட்டி தூக்கிய அதிஷ்டசாலி – துள்ளிக்குதித்து ஆரவாரம்

mbs-slot-machine-jackpot
Shin Min Daily News

மெரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் ஸ்லாட் மெஷின் ஜாக்பாட் அதிஷ்ட போட்டியில் பெண் ஒருவர் சுமார் S$1.17 மில்லியன் தொகையை வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

அவர் வெற்றி பெற்ற முழுமையான தொகை S$1,175,425.82 ஆகும்.

இந்திய வம்சாவளி ஆடவரின் பலே திட்டம்.. மருத்துவ செலவுகளை தெரிந்தவர்கள் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முயற்சி

கடந்த ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த அதிஷ்ட நிகழ்வை சக கேசினோ வாடிக்கையாளர் ஒருவர் கண்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

வெற்றி பெற்ற அந்த பெண், கேசினோவிற்கு வருவது இதுவே முதல் முறை என்றும் வாடிக்கையாளர் கூறினார்.

அந்தப் பெண்ணுக்கு 40 வயது இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், உண்மையில் வெற்றி பெற்றாரா என்பதை சரிபார்க்க அந்த வாடிக்கையாளரிடம் பெண் உதவியும் கேட்டுள்ளார்.

இயந்திரத்தின் மேல் காட்டப்பட்ட மொத்த பரிசுத் தொகையையும் பார்த்த வாடிக்கையாளர் பெண் வெற்றி பெற்றதை உறுதி செய்தார்.

பெரிய தொகையை வென்ற அந்த பெண், துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் மூழ்கிய அந்த பெண், தனக்கு உதவி செய்த வாடிக்கையாளருக்கு டிப்ஸாக S$200 கொடுத்துள்ளார்.

வேலை செய்த இடத்தை விட்டு ஓடிய வெளிநாட்டு பணிப்பெண் – தேடிவரும் முதலாளி