ஜப்பான் அமைச்சர் சிங்கப்பூர் வருகை!

Japan minister visit Singapore
(Photo: Sentinel)

ஜப்பானின் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் கொனோ டாரோ (Kono Taro) புதன்கிழமைக்குள் சிங்கப்பூர் வருவார் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், திரு கோனோ, துணைப் பிரதமர் ஹெங் சுவீ கீயட் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் உணவருந்துவார் என்றும் MFA கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஊழியர் இறந்த நிலையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை

மேலும் அவர், வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ குங் ஆகியோரையும் சந்திப்பார்.

கூடுதலாக, அவர் கல்வி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், இன்போகாம் ஊடக மேம்பாட்டு ஆணையம், பொது சேவை பிரிவு மற்றும் ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசாங்க குழு ஆகியவற்றின் விளக்கங்களைப் பெறுவார் என்று MFA கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 30 முதல் தடுப்பூசி போடப்படும்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…