சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்திற்கு தனது செயல்பாடுகளை மாற்றும் ‘ஜெட்ஸ்டார் ஏசியா’ நிறுவனம்!

Photo: Jetstar Asia

ஆஸ்திரேலியா நாட்டின் குறைந்தக் கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும், ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம் (Jetstar Asia), அடுத்தாண்டு மார்ச் மாதம் 25- ஆம் தேதிக்குள் தனது செயல்பாடுகளை சர்வதேச சாங்கி விமான நிலையத்தின் ( Changi Airport Group- ‘CAG’) முனையம் 1- லிருந்து (Terminal 1) முனையம் 4- க்கு மாற்றும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விமான நிறுவனம் மற்றும் சாங்கி விமான நிலைய குழுமம் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

“சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போனால் நிர்வாகம், மக்கள் வாழ்வும் தவறாக போய்விடும்” – பிரதமர் லீ

ஏர் ஏசியா குரூப் (AirAsia Group) மற்றும் கேத்தே பசிபிக் (Cathay Pacific), கொரியன் ஏர் (Korean Air) போன்ற விமான நிறுவனங்களுடன் இணைந்து, இந்த ஆண்டு அக்டோபர் 25- ஆம் தேதி அன்று ஜெட்ஸ்டார் ஏசியா முனையம் நான்குக்கு மாற்றப்படும் என்று கடந்த ஜூலை மாதம் சாங்கி விமான நிலையம் குழுமம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஜெட்ஸ்டார் நிறுவனம், அந்த நேரத்தில் “இடம் மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை” என்று கூறியது. மேலும், இடமாற்றம் செய்வதற்கான முடிவு சாங்கி விமான நிலையத்தால் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஏன்? – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

இதுவரை 14 விமான நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நான்காவது முனையத்திற்கு வெற்றிகரமாக மாற்றிக் கொண்டு விட்டன என்பது நினைவுக்கூறத்தக்கது.