சிங்கப்பூரிலிருந்து 3 நகரங்களுக்கு சில விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள ஜெட்ஸ்டார் ஆசியா..!

Photo: Jetstar Asia

மலிவுக் கட்டண விமானமான ஜெட்ஸ்டார் ஆசியா தென்கிழக்கு ஆசியாவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு மீண்டும் சேவையை இந்த வாரம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

முகக் கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் ஆகியவையுடன் விமான குழு உறுப்பினர்கள் குறைவான சேவைகளை வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 7 மெக்டொனால்டு ஊழியர்கள் 9 விற்பனை நிலையங்களில் பணிபுரிந்துள்ளனர்..!

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) முதல், சிங்கப்பூர் மற்றும் மணிலா, பாங்காக் மற்றும் கோலாலம்பூர் இடையே வாரத்திற்கு ஐந்து சேவைகளை ஜெட்ஸ்டார் ஆசியா வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிக வலையமைப்பு சேவைகள், வீடு திரும்பும் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் அல்லது பயணத்திற்கு எழுத்துபூர்வ முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று ஜெட்ஸ்டார் திங்களன்று ஊடக வெளியீட்டில் தெரிவித்தார்.

குறைந்தபட்சம் செப்டம்பர் வரை இந்த விமானங்கள் இயங்கும் என்று ஜெட்ஸ்டார் செய்தித் தொடர்பாளர் CNAவிடம் கூறினார்.

மேலும் இந்த சேவை, குடிமக்களை திருப்பி அனுப்பவும், இந்த நேரத்தில் பிராந்தியத்திற்கு சரக்குகளை அனுப்பவும் உதவும் என்றும் கூறினார்.

மணிலாவுக்கான பயணிகள் விமானங்கள் செவ்வாய் கிழமைகளிலும், கோலாலம்பூருக்கான விமானம் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

பாங்காக்கிற்கு சரக்கு விமானங்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

விமானப் பயணத்தின்போது தண்ணீர் மட்டும் விநியோகிக்கப்படும்., மேலும் பயணிகள் எந்நேரமும் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையாக 1,426 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!