சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்

(Photo: gocrowdera)

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக வாலிபரிடம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்த கும்பல் மீது தமிழக சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 24), இவரின் தந்தை செல்லக்கண்ணு. கார்த்திக் ராஜாவுக்கு வெளிநாட்டு வேலையில் மோகம் இருந்துள்ளது.

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய ஊயர்வு!

அதுபற்றிய இணையதள தேடலில் அவர் இறங்க, அப்போது இணைய தளம் ஒன்றில் வெளிநாட்டு வேலை ஆஃபர் இருப்பதை கண்டு அதில் விண்ணப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வேலை தொடர்பாக அந்த மர்ம நபரை கார்த்திக் ராஜா தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அதில் வெளிநாட்டில் நல்ல வேலை உள்ளதாகவும் அதற்கான அனைத்து தகுதிகளும், அனுபவமும் உங்களுக்கு இருப்பதாகவும் ஆசை வார்த்தைகளை அல்லி வீசியுள்ளார் மர்மநபர்.

“சிங்கப்பூரில் பெரிய வேலை” என்று கூறியதால், எப்படியாவது அந்த வேலையை பெற்றுவிட வேண்டும், “நல்ல சம்பளம்; லைப் செட்டில்” என்று ஆர்வம் அதிகரித்து உற்சாகமானார் கார்த்திக்.

பின்னர் நடத்தப்பட்ட ஆன்லைனில் நேர்முகத்தேர்வில் அவர் வெற்றி பெற்றவுடன், அதற்கு இதற்கு என்று கூறி முன்பணம் கேட்டுள்ளார் மர்மநபர்.

மேலும், சிங்கப்பூர் தூதரக கட்டணம். விசா கட்டணம், சிங்கப்பூரில் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு கட்டணம், என பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளார்.

அந்த மோசடிகாரர்களின் பேச்சை நம்பிய கார்த்திக் ராஜா, அவர்களின் வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் செலுத்தி உள்ளார்.

பின்னர் வழக்கம்போல், மர்ம நபர் எஸ்கேப் ஆக, தான் செலுத்திய பணத்தினை பெற்றுத்தருமாறு கார்த்திக் ராஜா ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சிங்கப்பூர் வேலை என்றதும் மயங்கிவிடாமல், உண்மைத்தன்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த, தேசிய ஊதிய மன்றம் முயற்சி!