சிங்கப்பூரில் இது போன்ற வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்கி விடாதீர்கள்… உஷார்!

police-scam-arrest-eab-e-commerce-affiliate-business
Singapore Police Force

சிங்கப்பூரில் இரண்டு வெவ்வேறு தொடர் வேலை மோசடிகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை சிங்கப்பூர் காவல் படை கைது (SPF) செய்துள்ளது.

கடந்த மார்ச் 8 மற்றும் 18 ஆம் தேதிகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக SPF தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

இதில், மார்ச் 8 முதல் 18 வரை நடந்த சோதனை நடவடிக்கையில் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே போல், மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த சோதனை நடவடிக்கையில் 26 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு தொடர் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

எப்படி மோசடி செய்யப்படுகிறார்கள்?

இதில் மோசடி செய்பவர்கள் போலி ஆன்லைன் வேலைகளை வழங்குவர். அதில் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என கூறுவர்.

பின்னர், தங்கள் உறுப்பினர் நிலையை மேம்படுத்தி அதிக லாபம் ஈட்ட, அந்த வேலையில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

அவ்வாறு செய்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அதிக லாபம் ஈட்டியதாக ஒரு மாயை உருவாக்கப்படும்.

ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை வரும் போது தான் இதில் தாம் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி சந்தேக நபருக்கு அடி; அதிகாரி வெங்கடேஷ் சஸ்பென்ட்.!