வேலை வாங்கித்தருவதாக மோசடி – முறியடித்த இரு நாடுகள்

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (RMP) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில், சுமார் S$1.3 மில்லியனுக்கும் அதிகமான எல்லை தாண்டிய வேலை மோசடி முறியடிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் காவல்துறையினரிடையே உள்ள கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வுக்குப் பிறகு, மலேசிய காவல்துறை ஜோகூரில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்தியதாக SPF தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சிங்கப்பூர்

இருநாட்டு ஒத்துழைப்புடன் அரங்கேறிய இந்த சோதனை நடவடிக்கையின்போது 21 முதல் 27 வயதுக்குட்பட்ட மூன்று மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில், 16 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணையும் வர்த்தக விவகாரத் துறையின் (CAD) அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் S$1,350,700 சம்பந்தப்பட்ட 188க்கும் மேற்பட்ட வேலை மோசடிகளுக்கு அந்த குழு பொறுப்பாகும் என்று நம்பப்படுகிறது.

இந்த வேலை தொடர்பான மோசடியில் ஈடுபடுவோர் சமூக வலைதள ஊடகங்களின் வழியே வேலை வாய்ப்புகள் தொடர்பான விளம்பரங்களைப் பதிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு