வேலை வாய்ப்பு மோசடிகள்… காவல்துறை எச்சரிக்கை!

File Photo Via The Singapore Police Force

சிங்கப்பூரில் போலி இணைய தளங்கள், போலி செயலிகள், போலி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக, காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய முறையில் பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 500- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதேசமயம், பொதுமக்களுக்கும் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

‘டிபிஎஸ் வங்கியில் பணி’- விண்ணப்பிக்க அழைப்பு!

இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் இது போன்ற வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி சம்பவங்களில் குறைந்தது 6.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலை வாய்ப்பு மோசடிகளை காவல்துறையினர் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

அதில், போலியான செயலிகள் மூலமாகவும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி நபர்கள் பணத்தைப் பறிக்கின்றன. எனவே, வேலை தேடும் நபர்கள், இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், சரியான தகவல்களின்றி இருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். செய்யும் வேலையை விடப் பன்மடங்கு அதிகளவில் பணம் அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டால், அது உண்மையானதல்ல என்பதை உணர வேண்டும். தெரியாத, அங்கீகரிக்கப்படாத ஆண்ட்ராய்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஒருமுறைக்கு பலமுறை செயலிகள் குறித்த தகவல்களை ஆராய வேண்டும்.

“VTL- திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தகவல்!

வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் காவல்துறையின் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) www.police.gov.sg/iwitness என்ற இணைய தளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.