“VTL- திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தகவல்!

Community leaders play vital role amid downturn: Iswaran
(PHOTO: Gov.sg's YouTube channel)

சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 1,000- ஐ கடந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் பொதுமருத்துவமனைகளில் உள்நோயாளிகள் சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. இதனிடையே, சிங்கப்பூருக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

மூதாட்டி மீது காரை மோதிய 71 வயது முதியவருக்கு அபராதம்!

இந்த நிலையில், நேற்று (20/09/2021) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிப் போட்டுக் கொண்டப் பயணிகள் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டப் பயணிகளுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தை (Vaccinated Travel Lane- ‘VTL’) வெற்றிகரமாகத் தொடங்கிய பிறகு, திட்டத்தின் கீழ் வந்த சுமார் 900 பயணிகளிடையே ஒருவருக்கு மட்டும் கொரோனா நோய்த்தொற்று மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த சிறப்பு பயணப் பாதை திட்டத்தில் ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக முன்னோட்டமாக செயல்படுத்தப்பட்டது. சிங்கப்பூருடன் அத்தகைய சிறப்புப் பயணப் பாதைத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து பல நாடுகளும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

‘டிபிஎஸ் வங்கியில் பணி’- விண்ணப்பிக்க அழைப்பு!

தடுப்பூசிப் போட்டுக் கொண்டப் பயணிகளுக்கான பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு இதுவரை 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த சிறப்பு ஏற்பட்டின் கீழ், முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இங்கு வந்து சேர்ந்ததும் மேற்கொள்ளப்படும் பரிசோதனையிலும், அவர்கள் தங்கியிருக்கும் காலத்திலும் அவர்களுக்குக் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பால், வரும் நாட்களில் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.