ஜொகூரில் சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் கொள்ளை சம்பவங்களால் பாதிக்கப்படுகிறார்களா? – இணையத்தில் பரவும் செய்திக்கு விளக்கம் கொடுக்கும் ஜொகூர் காவல்துறை

Nigel Chua

ஜொகூர் பாருவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் உண்மை இல்லை என ஜோகூர் காவல் துறை நிராகரித்துள்ளது.

இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகள் உண்மை தகவல்களைக் கொண்டவை அல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.

நகரும் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இருவரை பின்னால் இருந்து வேகமாக தாக்கிய டிராலி – வைரல் வீடியோ

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே மீண்டும் நில வழியிலான எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு, ஜோகூரில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக அந்த பதிவு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜோகூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஷாஹுரினைன் ஜாய்ஸ் கூறினார்.

ஜோகூரில் தற்போது இது போன்ற குற்ற விகிதங்கள் அதிகரிக்கவில்லை என்றும், குற்றச்சாட்டு பொய்யானது என்றும் ஜோகூர் காவல்துறை கூறியதாக திரு ஷாஹுரினைன் குறிப்பிட்டார்.

எனவே, வலைத்தளங்களில் பரவுவதைக் கண்டு பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், தகவல்கள் உண்மைதானா என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியப் பெண்களை வேலைக்கு எடுத்து, அவர்களிடம் Work permit, பாஸ்போர்ட்டை கைப்பற்றி கடத்தி அடித்து துன்புறுத்தியவருக்கு சிறை, அபராதம்!