நகரும் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இருவரை பின்னால் இருந்து வேகமாக தாக்கிய டிராலி – வைரல் வீடியோ

சிங்கப்பூரில் உள்ள ஷெங் சியோங் சூப்பர்மார்கெட்டில் நகரும் நடைபாதையில் (travelator) டிராலி ஒன்று இருவரை தாக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

பின்னால் இருந்து மோதிய டிராலி குறைந்தது இரண்டு பேரை தாக்கி கீழே தள்ளியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தியப் பெண்களை வேலைக்கு எடுத்து, அவர்களிடம் Work permit, பாஸ்போர்ட்டை கைப்பற்றி கடத்தி அடித்து துன்புறுத்தியவருக்கு சிறை, அபராதம்!

நகரும் நடைபாதையில் சரிந்துகொண்டு சென்ற டிராலியில் அட்டைப் பெட்டிகள் அடுக்கி இருப்பது போல் தெரிகிறது.

இதில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் பின்னால் இருந்து டிராலி வேகமாக வருவது முதலில் தெரியவில்லை.

முதலில் ஒருவரை தாக்கி சென்றதும் அவர் அதிர்ச்சியில் என்ன நடந்தது என்று பின்னால் பார்க்கிறார். அதே போல வேகமாக சென்று மற்றொருவரையும் அது பின்னால் தாக்கியது.

டிராலியின் பின்னால் இரு ஊழியர்கள் துரத்தி வருவதை காணலாம், அவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பது வீடியோவில் தெரிகிறது.

இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது என்று இணையவாசிகள் பெரும்பாலானோர் கருத்து கூறி வருகின்றனர்.

கனவுகளோடு வேலைக்கு சென்ற முதல் நாள்… லிப்ட்டில் இருந்து விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த மலேசிய ஊழியர்!