“சிங்கப்பூரின் பெருமை பிரதமர் லீ” – மிக உயரிய விருதை பெற்றுக்கொண்டார் பிரதமர்!

johor-sultan-award-pm-lee
Sultan Ibrahim Sultan Iskandar/Facebook

பிரதமர் லீ சியென் லூங், ஜொகூர் சுல்தானிடமிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (மே 6) மிக உயரிய விருதை பெற்றார்.

அதாவது, ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரிடமிருந்து “ஆர்டர் ஆஃப் தி கிரவுன் ஆஃப் ஜோகூர்” (Order of the Crown of Johor) என்ற ஆக உயரிய விருதை திரு லீ பெற்றுக்கொண்டார்.

சாலையில் சென்றுகொண்டிருந்த வேன்., திடீரென சுழன்று சாலை தடுப்பு, வெளிநாட்டு ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரியில் மோதி விபத்து

இந்த விருதானது ஜோகூர் மாநிலத்தின் மிக உயரிய அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் மிக உயரிய விருதை பிரதமர் லீக்கு வழங்குவது அண்டை நாடுகளுக்கு இடையிலான “நீண்டகால நெருக்கமான மற்றும் வலுவான” உறவுகளின் சாட்சியமாகும் என்று ஜொகூர் சுல்தான் மே 6 அன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் லீ தொடர்ந்து முயற்சித்து வருவதற்கு தனது நன்றியைத் தெரிவித்த சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் பழங்காலத்திலிருந்தே சிறப்பான உறவில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதே போல, திருமதி. ஹோ சிங் “ஆர்டர் ஆஃப் சுல்தான் இப்ராஹிம் ஆஃப் ஜோகூர்” (Order of Sultan Ibrahim of Johor) என்னும் விருதை பெற்றுக்கொண்டார்.

இந்த விருதைப் பெற்ற முதல் சிங்கப்பூர் நாட்டவர் என்ற பெருமையை திருமதி. ஹோ பெற்றுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்