சிங்கப்பூருக்கு வருகிறார் ஜோகூர் சுல்தான்!

Photo: Sultan Ibrahim Sultan Iskandar Official Facebook Page

ஜோகூர் சுல்தான் மூன்று நாள் பயணமாக நாளை (20/07/2022) சிங்கப்பூர் வருகிறார்.

Netflix மோசடி: வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் – போலீஸ் எச்சரிக்கை

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (19/07/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பின் பேரில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் (Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar) நாளை (20/07/2022) சிங்கப்பூர் வருகிறார். அவருடன் ஜோகூர் மாநிலத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிங்கப்பூர் வருகின்றனர்.

இஸ்தானாவிற்கு செல்லும் ஜோகூர் சுல்தானுக்கு, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் அவரது கணவர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி அளிக்கும் மதிய விருந்தில் அவர் கலந்துக் கொள்கிறார். பின்னர், சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார்.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

சிங்கப்பூர் மூத்த அமைச்சரும், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியன் (Senior Minister and Coordinating Minister for National Security Teo Chee Hean) மற்றும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் தோங் (Emeritus Senior Minister Goh Chok Tong) ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார் ஜோகூர் சுல்தான்.

சிங்கப்பூருக்கும், ஜோகூருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜோகூர் சுல்தான் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், நாளை (20/07/2022) இஸ்தானாவில் நடைபெறும் விழாவில், அவருக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சட்டத்துறையில் கௌரவ டாக்டர் பட்டத்தை (Honorary Degree of Doctor of Laws by the National University of Singapore- ‘NUS’) அவருக்கு வழங்கவிருக்கிறது.

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றவருக்கு சிறை!

ஜோகூர் சுல்தான் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பெயரில் ஆர்க்கிட் மலருக்கு பெயர் சூட்டப்படும். அதேபோல், ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையிலான விரைவு ரயில் அமைப்பின் (Johor Bahru-Singapore Rapid Transit System- ‘RTS’) உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் (Woodlands North Terminus), செம்பவாங் விமானப்படைத் தளம் (Sembawang Air Base), ஐஎஸ்ஏஎஸ்-யூசோஃப் இஷாக் இன்ஸ்டிடியூட் (ISEAS-Yusof Ishak Institute) ஆகிய இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிடவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.