“வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் சுமார் S$900 மில்லியன் நிவாரண நிதி வழங்கப்படும்”

Pic: AFP

சிங்கப்பூரில் வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ், இந்த மாதம் 30ம் தேதியிலிருந்து சுமார் 900 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிவாரண நிதி வழங்கப்படும் என நிதி அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்துள்ளது.

சுமார் 43,900க்கும் அதிகமான முதலாளிகளுக்கு அந்த தொகை வழங்கப்படும் என்றும், அதன் மூலம் 570,000க்கும் அதிகமான ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒற்றுமைக்கான வரவு செலவுத் திட்டத்தின்போது வேலை ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் சுமார் 27.6 பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஊழியர்களின் மத்திய சேமநிதிக்குக் கட்டாயச் சந்தா தொகை செலுத்திய முதலாளிகள் வழங்குதொகைக்குத் தகுதிபெறுவர் என கூறப்பட்டுள்ளது.

“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்புப் பயண திட்டம் மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்”