ஜூலை 28- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ- 2ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயில் நிர்வாகம் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கட்டுப்பாட்டில் கீழ் வருகிறது. இக்கோயிலுக்கு நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்த நிலையில், வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் அமாவாசை வழிபாடு நடைபெறவுள்ளது. இந்நாளில் பக்தர்கள் அனைவரும் தர்ப்பணம் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும். https://bit.ly/aadiamavasai2022 என்ற கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று பிறந்ததேதி, பாஸ்போர்ட் எண் (அல்லது) மற்ற ஆவணங்களின் எண்ணை பதிவு செய்து, அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் தர்ப்பணம் செய்ய வந்தால் போதும்.

தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் எங்கும் நிற்காமல், வெளியே செல்ல நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். கோயில் சுற்றுப்புறத்தில் பிரசாதம் உண்ண வேண்டாம். பிரார்த்தனைகளின் போது எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கையைக் கடைபிடிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் மரணம்… இந்த யோசனை கண்டிப்பா பயன் தரும்!

தர்ப்பணம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். நேரில் முன்பதிவு கிடையாது. ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை 14- ஆம் தேதி தொடங்கியுள்ளது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.