ஜூலை 31- ஆம் தேதி பிஜிபி அரங்கத்தில் ரத்த தான முகாம்!

blood donation

சிங்கப்பூரில் இந்து அறக்கட்டளை வாரியம் ரத்ததான முகாமிற்கு (Blood Donation Drive) ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 397 சிராங்கூன் சாலையில் (Serangoon Road, Singapore 218123) உள்ள பிஜிபி அரங்கத்தில் (PGP Hall) வரும் ஜூலை 31- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 AM மணி முதல் பிற்பகல் 03.00 PM மணி வரை நடைபெறவுள்ளது.

ஜாகிங் சென்ற பெண் நீர்நாய்கள் துரத்தவும் உசைன் போல்ட் போல அலறியடித்து ஓட்டம் !

ரத்த தான முகாமில் கலந்துக் கொள்வோர் https://bit.ly/3O2VRaE என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்களின் பெயர் மற்றும் இ- மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டு பணியாளர்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியம்; புதிய ஏற்பாடு கண்டிப்பாக பயன்தரும்!

ரத்த தான முகாமிற்கு வரும் போது, உங்களின் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Photo: HEB Official Facebook Page