ஜூரோங் ஈஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

ஜூரோங் ஈஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் தெரு 21- ல் (Jurong East Street 21) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான புளோக் 287ஏ (Block 287A) அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (பிப்.18) அதிகாலை 01.50 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

ஜூரோங் ஈஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!
Photo: SCDF

இதையடுத்து, ஜூரோங் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு வந்தனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் 8- வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைப் பார்த்த வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

எனினும் தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனிடையே, சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்த இருந்த இருவர் பத்திரமாக தாமாகவே வெளியேறினர். புகையைச் சுவாசித்ததற்காக, மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.