சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

singapore lottery women bringing child
Stomp

சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளார்.

சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடைக்கு சென்ற அவர்கள் அங்கு லாட்டரி சீட்டு வாங்கியதாக நெட்டிசன்கள் கவலை தெரிவித்தனர்.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

கடந்த பிப்ரவரி 13 அன்று காலை 11.58 மணியளவில் ஃபஜர் ஷாப்பிங் சென்டரில் (Fajar Shopping Centre) இந்த ஜோடியைக் கண்டதாக ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் கூறினார்.

அந்த வாசகர் எடுத்த புகைப்படத்தில், பெண்ணுடன் சிறுவன் ஒருவர் சிங்கப்பூர் பூல்ஸ் கடைக்குள் நுழைவதைக் காண முடிந்தது, அந்த பெண் அவரது தாயாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டது.

“கடைக்குள் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் சிறுவன் இருந்தார், இது மிகவும் மோசமானது, இது குழந்தையின் முழு குழந்தைப்பருவத்தையும் பாதிக்கும்” என அவர் கூறினார்.

மற்ற பெரியவர்கள் குழந்தையை அழைத்து வராமல் இருக்கும்போது அவர் மட்டும் செய்தது கவலையளித்ததாக அவர் சொன்னார்.

அதே போல அந்த பதிவை பார்த்த மற்ற பெரியவர்கள் இது சிறுவனுக்கு சூதாட கற்றுக்கொடுக்கும் என வருத்தம் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் 18 வயதுக்குட்பட்ட எவரும் பந்தயம் கட்டவோ அல்லது வெற்றிபெறும் டிக்கெட் பரிசைப் பெறவோ அனுமதி இல்லை என்றாலும், சிறுவர்கள் கடை வளாகத்துக்குள் இருப்பதைத் தடுக்கும் சட்டம் எதுவும் இல்லை.