கட்டுப்பாடுகளால் மீன்களை வாங்குவதற்கு நீண்ட நேரமாவதாக வர்த்தகர்கள் கவலை!

Jurong Senoko fishery ports
Pic: Ili Nadhirah Mansor/TODAY

 

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் அனைத்து பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகின்றன.

பொது இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் ‘கடல் சிக்கன்’ என்னும் பலூன் மீன்!

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம், மக்களின் நலன் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு, மூடப்பட்டுள்ள சந்தைகள் மீன்பிடி துறைமுகங்கள் ஆகியவை கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஜூரோங் மீன்பிடி துறைமுகம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (03/08/2021) மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்ட 75% மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் குறைவான ஊழியர்களே பணிக்கு வருவதால் துறைமுகத்தில் செயல்பாடுகள் இன்னமும் வழக்கநிலைக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில் சிஎன்ஏ 938 (CNA 938) வானொலி நிலையத்துக்கு நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மெண்ட் டான் (Minister of State for Sustainability and the Environment Desmond Tan) நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தில் (Jurong Fishery Port) அதிகாரிகள், புதிய நடைமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படகுகளில் இருந்து மீன்களை இறக்கும் முறை, புதிய கட்டண முறைகள் ஆகியவை அடங்கும்.

கிளெமெண்டி வனப்பகுதியில் வழிமாறி தொலைந்த 3 பெண்கள் – பத்திரமாக மீட்ட காவல்துறை

கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஜூரோங் மீன்பிடி துறைமுகம் நேற்று முன்தினம் (02/08/2021) மீண்டும் திறக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகளால் ஊழியர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. இங்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பலருக்கு வணிகத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சியே. துறைமுகத்தில் அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு நுழைவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் காரணமாக மீன்களை வாங்குவதற்கு நீண்ட நேரமாகிறதாக மீன் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.