GE2020: ஜூரோங் குழுத்தொகுதியில் அதிக வாக்கு விகிதம் பெற்ற தர்மன் சண்முகரத்னம் அணி..!

Jurong GRC with 74.62 per cent of the vote
Jurong GRC with 74.62 per cent of the vote (Photo: NTU)

சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்த பொதுத் தேர்தலில் 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க : GE2020: வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு. எஸ் ஈஸ்வரன் வழிநடத்திய மக்கள் செயல் கட்சி (PAP) குழு வெற்றி..!

2015 பொதுத் தேர்தலில், 29 தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி 89 இடங்களுக்கு 83 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.

தர்மன் சண்முகரத்னம், ஷான் ஹுவாங் (Shawn Huang), ரஹாயு மஹ்சாம் (Rahayu Mahzam), ஸீ யாவ் குவான் (Xie Yao Quan) மற்றும் டான் வு மெங் (Tan Wu Meng) ஆகியோர் PAP அணியில் அதிக சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஜூரோங் குழுத்தொகுதியில் அதிகமாக 74.62 சதவீத வாக்குகளை PAP பெற்றுள்ளது.

ஆங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ சியென் லூங்கின் அணி, RP பொதுச்செயலாளர் கென்னத் ஜெயரத்னமின் அணிக்கு எதிராக 71.91 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில், மிகக் குறுகிய வித்தியாசத்தில் 51.69 சதவீத வாக்குகளைப் பெற்று PAP தொகுதியைக் கைப்பற்றியது.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில், திரு எஸ் ஈஸ்வரன் வழிநடத்திய மக்கள் செயல் கட்சி (PAP) குழு, அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (PSP) டாக்டர் டான் செங் போக் மற்றும் அவரது அணியை தோற்கடித்தது.

இதில் 51.69 சதவீத வாக்குகளுடன் ஐந்து இடங்களை PAP கைப்பற்றியது, அதே சமயத்தில் PSP 48.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : GE2020: 61.24% வாக்குகளுடன் அமோக வெற்றி; ஆட்சி அமைக்கும் மக்கள் செயல் கட்சி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg