30 ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டு தலத்தை அகற்ற இறுதி எச்சரிக்கை – கூடுதல் அவகாசம் கோரிக்கை

30 ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டு தலத்தை அகற்ற இறுதி எச்சரிக்கை - கூடுதல் அவகாசம் கோரிக்கை
Google Maps street view

ஜூரோங், Science Centre ரோட்டில் உள்ள வழிபாட்டு ஆலயத்தை அகற்ற கோரி பராமரிப்பாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை முன்னர் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அதனை அகற்ற கூடுதல் கால அவகாசம் தேவை என்று அதன் பராமரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்தை அகற்ற வேண்டும் என்று ஜேடிசி, தேசிய பூங்கா அமைப்பு (NParks), மற்றும் சிங்கப்பூர் நில ஆணையம் (SLA) ஆகியவை தெரிவித்தன.

அதனை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு முதல் பல காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அது அகற்றப்படாமல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பெரும் திட்டத்துக்காக அந்த நிலம் தேவைப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Science Centre ரோட்டில் உள்ள அந்த வழிபாட்டு ஆலயம் சுமார் 30 ஆண்டுகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான தளத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் – நலமுடன் இருப்பதாக கூறும் நிறுவனம்