சிங்கப்பூரில் கடைக்குள் புகுந்து மதுபானம் திருட்டு; இளைஞர் கைது.!

Jurong street thief arrest

சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 72-ல் (Jurong West Street 72) உள்ள ஒரு கடைக்குள் புகுந்து மதுபானம் திருடிய சந்தேகத்தின் பேரில் 25 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 08) பிற்பகல் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாங்கி விமான நிலைய தொழிலாளர்களுக்கு பழப்பெட்டிகள் வழங்கல்!

காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் திருட்டு நடந்த பத்து மணி நேரத்துக்குள் சந்தேக நபரை அடையாளம் கண்டு ஜூரோங் காவல்துறை பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், சந்தேக நபர் திருட்டு சம்பவத்தின்போது அணிந்திருந்த உடைகள், காலணிகள் ஆகியவற்றையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி தருவதாக கூறி மோசடி