கார்த்திகை தீபத்திருவிழா: ‘புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும்’ என அறிவிப்பு!

கார்த்திகை தீபத்திருவிழா: 'புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும்' என அறிவிப்பு!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

 

சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில். கார்த்திகைத் தீபத்திருநாளான வரும் நவம்பர் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

முதலாளியின் வைர நெக்லஸை திருடி போட்டுகொண்டு டிக்டாக் வீடியோ வெளியிட்ட பணிப்பெண்

அதன்படி, வரும் நவம்பர் 26- ஆம் தேதி அன்று காலை 08.30 மணிக்கு புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு ஹோமமும், காலை 09.30 மணிக்கு பால்குட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு தீபாராதனையும், காலை 11.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இந்து அறக்கட்டளை வாரியமும், இந்து ஆலோசனை வாரியமும் இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டங்கள்!

அதேபோல், மாலை 06.45 மணிக்கு வரிசை எடுத்தல், இரவு 07.15 மணிக்கு சிறப்பு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் புறப்பாடும், இரவு 08.00 மணிக்கு சொக்கப்பானை ஏற்றுதலும், இரவு 08.45 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும். இந்த திருக்கார்த்திகைத் தினத்தன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.