பொங்கோலில் உள்ள KFC உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து

KFC outlet in Punggol has licence suspended

பொங்கோலில் உள்ள KFC உணவகத்தின் உரிமம் கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 19 வரை இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

681 பொங்கோல் டிரைவில் உள்ள அந்த கடை, கடந்த ஒரு வருடமாக சுத்தமில்லாத அல்லது மாற்று பொருள் கலந்து உணவை விற்பனை செய்த 2 குற்றங்களுக்காக 12 குற்றப்புள்ளிகளை பெற்றுள்ளது.

ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையும் மேலும் 4 MRT ரயில் நிலையங்கள்!

மேலும், அந்த கிளை உரிமையாளருக்கு S$800 அபராதமும் விதிக்கப்பட்டதாக SFA கூறியுள்ளது.

சி.என்.ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த SFA அமைப்பு, அந்த உணவகத்தில் இரண்டு ஆய்வுகளை நடத்தியதாகக் கூறியது.

ஆகவே, சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தில் உணவு சுகாதார விதிமுறைகளின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் அதன் மீது விதிக்கப்பட்டுள்ளது.

SFAன் குற்றப்புள்ளிகள் அமைப்பின் கீழ், ஒரு வருட காலப்பகுதியில் 12 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப்புள்ளிகளைக் பெறும் நிறுவனத்தின் உரிமம் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தபடலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிலத்தடி துணை மின்நிலையம் சிங்கப்பூரில்!