தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

komala vilas Singapore owner death
(Photo: Tamil Murasu)

பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு ராஜு குணசேகரன் (வயது 68) நேற்று பிற்பகல் காலமானார்.

அவரது உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படுவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

திரு குணசேகரன், கடந்த 1947ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த கோமள விலாஸ் சைவ உணவகத்தை நடத்திவந்தவர் ஆவார்.

அவரது தந்தை திரு ஓஎம் ராஜு அந்த உணவகத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். அவரது மனைவி கோமதி குணசேகரன் கடந்த ஆண்டு இயற்க்கை எய்தினார்.

கடந்த 2000-2004ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் இந்திய உணவகங்களின் சங்க தலை­வ­ராக திரு குணசேகரன் இருந்தார்.

இந்தியப் பிரதமர் மோடி சிங்கப்பூர் வந்தபோது, சிங்கப்பூர் பிரதமரால் இந்த உணவகத்திற்கு உணவருந்த அழைத்துச் செல்லப்பட்டது நம் நினைவில் இருக்கும்.

பிரிட்டனில் பரவும் புதுவகை கிருமித்தொற்றின் முதல் சம்பவம் சிங்கப்பூரில் பதிவு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…