இந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

foreign life

தென் கொரியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிர்ணயிக்கப்பட்ட சிறப்பு வசதிகளில் நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் சனிக்கிழமை (டிசம்பர் 26) முதல் நடப்புக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பரவும் புதுவகை கிருமித்தொற்றின் முதல் சம்பவம் சிங்கப்பூரில் பதிவு

அதாவது, தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் அன்று இரவு 11.59 மணி முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்.

சமூக கிருமி பரவல் குறித்த ஆபத்தின் காரணமாக சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இடையேயான Reciprocal Green Lane பயண முறையின்கீழ் சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் திரும்புவதற்கும் இந்த நடவடிக்கை பொருந்தும்.

தென் கொரியாவில் COVID-19 தொற்று பாதிப்புகளின் எழுச்சி காரணமாக எல்லை நடவடிக்கைகளை கடுமையாக்குவதாக அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

எல்லை நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அது SafeTravel இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் புத்தாண்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் 11 முக்கிய இடங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…